ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா "கருப்பு" படத்தில் நடித்துள்ளார். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் .இதில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக இந்தப்படம் தயாரிப்பில் உள்ளது. ஓடிடி வியாபார பிரச்னையால் இத்தனை நாட்கள் தேங்கி கிடந்த கருப்பு படத்தின் டிஜிட்டல் உரிமையை தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 35 கோடி மற்றும் படம் வெற்றி பெற்றால் இன்னும் பல கோடிகள் சேர்த்து தருவதாக தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து படம் ரிலீஸ் தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அனேகமாக அடுத்தவாரம் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம். இந்த படத்தை மே 15ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!