
சூர்யா தெலுங்கில் நடிக்கும் படம் பிரித்விராஜ் படத்தின் தழுவலா ?
இந்த நிலையில் இந்தப் படம் கடந்த 2007ல் மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான கங்காரு படத்தின் கதையை தழுவி உருவாகிறது என்கிற ஒரு செய்தியும் சோசியல் மீடியாவில் பரவியது. அதற்கு காரணம் அந்த படத்தில் பிரித்விராஜும் இதேபோன்று ஒரு குழந்தையை தன்னுடன் சேர்த்து இணைத்தபடி இருப்பது போல அந்த சமயத்தில் போஸ்டர் வெளியாகி இருந்தது.
அது மட்டுமல்ல தன் காதலியின் சகோதிரி மர்மமான முறையில் இறந்த பின்னர், அந்த குழந்தையை தானே வளர்த்தபடி அதன் தந்தை யார் என பிரித்விராஜ் தேடி கண்டுபிடிப்பதாக கதை உருவாக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் அந்த படத்திற்கும் சூர்யா படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இது இயக்குனர் வெங்கி அட்லூரியின் ஒரிஜினல் கதை என்றும் படக்குழுவினர் தரப்பிலிருந்து ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!