கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா
மார் 02, 2026
Advertisement
கடந்த பிப்ரவரி 26ம் தேதி உதப்பூரில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டங்கள் பாரம்பரிய சடங்குகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தெலுங்கானாவில் மஹ்பூப் நகர் மாவட்டத்திலுள்ள அச்சம்பேட்டைக்கு அருகில் உள்ள விஜய் தேவரகொண்டாவின் மூதாதையர் கிராமமான தும்மல் பேட்டாவில் உள்ள சத்யநாராயண சுவாமி கோவிலில் மணமக்கள் பூஜை செய்துள்ளார்கள். அவர்களது இந்த வருகையை ஒட்டி கிராமவாசிகள் அவர்களுக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்திருக்கிறார்கள்.
அதோடு இந்த கிராமத்தில் விஜய் தேவரகொண்ட குடும்பத்தினர் ஒரு புதிய வீட்டை கட்டி உள்ளார்களாம். மேலும், உதய்பூரில் திருமணம் செய்து கொண்டு திரும்பிய பிறகு விஜய் தேவாரகொண்டா, ராஷ்மிகா மந்தனா தம்பதியர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியையும் சந்தித்து தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற மார்ச் நான்காம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!