நடிகர் சசிகுமார், இயக்குனர் ராஜூ முருகன் கூட்டணியில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் "மை லார்ட்" . இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும் கமர்ஷியல் ஆக வெற்றி படமாக அமையவில்லை. ஆனாலும், ராஜூ முருகனின் பணிகள் பிடித்துள்ளதால் மீண்டும் ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன் தயாரிக்கின்றார் என கூறப்படுகிறது. அயோத்தி பட காலகட்டத்தில் சசிகுமார், ரவீந்தரன் தயாரிப்பில் மூன்று படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்தார். அதில் ஒரு படமாக இப்படம் இருக்க போகிறது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!