
நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா
தற்போது சமந்தா அளித்துள்ள ஒரு பேட்டியில், சிறுவயதில் இருந்தே எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை சரியாக செய்ய வேண்டும் என்று நான் நினைப்பேன். என்னிடத்தில் திட்டமிடல் எப்போதுமே இருக்கும். குறிப்பாக என்னை பாசிட்டிவ் எனர்ஜியுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் நினைப்பதால் ரீல்ஸ் போடுபவர்கள், நெகட்டிவா பேசுபவர்களை தவிர்த்து விடுகிறேன். குறிப்பாக வலைதளங்களில் பொய்யான அவதூறான செய்திகளை யார் பரப்பினாலும் அது போன்ற நபர்களை நான் பிளாக் செய்து விடுகிறேன். அந்த அளவுக்கு எனக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் கூட நெகட்டிவாக செயல்படுவதை கூட நான் விரும்ப மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சமந்தா.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!