
தமிழ்ப் புத்தாண்டுக்கு இன்னும் இரண்டு மாதங்களே… எந்தப் படம் வெளியாகும் ?
இந்த வருடத்திற்கான தமிழ்ப் புத்தாண்டிற்கு எந்தெந்தப் படங்கள் வெளியாகும் என்று இதுவரையில் எந்த அறிவிப்பும் வரவில்லை. விஜய்யின் "ஜனநாயகன்" படத்தின் வெளியீடு குறித்து தெரிந்த பிறகே இந்த அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது. "ஜனநாயகன்" தயாரிப்பு நிறுவனம் இப்போதுதான் வழக்கை வாபஸ் பெற்றுள்ளது. ரிவைசிங் கமிட்டி வேலைகள் முடிந்த பிறகே பட அறிவிப்பு வெளியாகும்.
அதற்கடுத்து பெரிய படம் என்றால் சூர்யா நடித்துள்ள "கருப்பு" படம் தான். அவர்களும் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இவை தவிர மேலும் சில படங்களின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
ஏப்ரல் மாதக் மத்தியில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அப்படி அந்த சமயம் தேர்தல் நடந்தால் இந்த வருட தமிழ்ப்புத்தாண்டுக்கு புதிய படங்கள் வருவது கடினம்தான்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!