
சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு கூட்டணியின் புதிய படம் தள்ளிப்போகிறது?
அவ்வளவு பெரிய தொகையில் படத்தை ஆரம்பிக்கத் தங்களால் முடியாது என தயாரிப்பு நிறுவனம் சொல்லியிருக்கிறது. மீண்டும் பட்ஜெட்டை சில கோடிகள் குறைத்த பிறகும் அதுவும் அதிகம் என சொல்லப்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயனின் தற்போதைய வியாபார நிலவரம், வசூல் நிலவரம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் பட்ஜெட் மிக அதிகமாம். ஓடிடி, சாட்டிலைட் டிவி உரிமை ஆகியவற்றைச் சேர்த்தாலும் கூட ரிஸ்க் என்று எண்ணியிருக்கிறார்கள். அதனால், இப்போதைக்கு படத்தைத் தள்ளி வைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
"டான்" இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால், அவர் ரஜினி படம் இயக்கப் போய்விட்டதால் அதை முடித்த பிறகுதான் சிவகார்த்திகேயன் பக்கம் வருவாராம். எனவே, சிவகார்த்திகேயன் உடனடியாக வேறு இயக்குனரைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார்.
அவரது தயாரிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள "தாய்கிழவி" படத்தின் இயக்குனர் சிவகுமார் முருகேசன் சொன்ன கதை ஒன்று பிடித்திருக்கிறதாம். அதை ஆரம்பிக்கலாமா என பேசி வருகிறார்களாம்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!