
உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு
இந்த படத்துக்காக வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு என கேள்வி எழுந்துள்ளது. காரணம், திருமணத்துக்கு பின் மனைவி உஷா மீதான அன்பை வெளிப்படுத்த, இப்படி தலைப்பு வைத்து எடுத்த படம் இது. தவிர, கமர்ஷியலாகவும் படம் வெற்றி பெற்று அவர் குடும்பம் நல்ல நிலையில் அமர, அப்போது இந்த படம் உதவியது.
இந்த பட பிரமோஷனுக்காக ஒரு ஆல்பம் வெளியிட்டுள்ளார் டி.ராஜேந்தர். ஆனால், இதுவரை படம் குறித்து சிம்பு எதுவும் பேசவில்லை. அவர் பேசினால் நன்றாக இருக்கும், அவர் ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள். படத்துக்கும் கூடுதல் பப்ளிசிட்டி கிடைக்கும் என தியேட்டர்காரர்கள் விரும்புகிறார்கள். ஆகவே, அப்பாவின் ஆர்வம், அம்மா பாசம் காரணமாக கண்டிப்பாக ஏதாவது செய்வார். விரைவில் படம் குறித்து சிம்பு வீடியோ வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வெளிநாட்டில் இருப்பதால் தமிழகத்தில் முதற்காட்சியை பார்க்க வாய்ப்பில்லையாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!