
பிளாஷ்பேக் : படப்பிடிப்பு தவறாக நடந்ததால் பாட்டை மாற்றிய இளையராஜா
இந்தப் படத்தின் முதல் பாடல் காட்சி பொள்ளாச்சி பகுதியில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இது ஹீரோ பிரபுவின் அறிமுகக் காட்சி. இந்த பாடல் காட்சிக்காக 50 யானைகள் 200க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் நூறுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர். பாடல் காட்சியும் பிரம்மாண்டமாக படமானது. படப்பிடிப்பிற்கு பிறகு பாடல் காட்சியை போட்டு பார்த்த போது பாடலுக்கும் பின்னணி இசைக்கும் காட்சிகளுக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது.
சிவச்சந்திரன் இயக்குனராக புதியவர் என்பதால் அவரால் சரியாக அந்த பாடல் காட்சியை படமாக்க முடியவில்லை. மீண்டும் அந்த காட்சி எடுத்தால் பல லட்சங்கள் செலவாகும். இதனால் இளையராஜாவை சந்தித்து "இப்படி நடந்து விட்டது என் முதல் பட வாய்ப்பு பரி போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது" என்று சிவச்சந்திரன் புலம்பினார்.
இளையராஜாவோ "ஒன்றும் பயப்படாதே நான் சரி பண்ணித் தருகிறேன்" என்று சொல்லி. பாடல் காட்சியை போட்டு பார்த்து அதற்கு ஏற்ப பாடல் வரிகளையும் மெட்டையும் மாற்றி புதிய பாடலாக உருவாக்கி கொடுத்தார். இப்பொழுது பாட்டும் பாடல் காட்சிகளும் சரியாக பொருந்தியது.
இந்தப் படம் ஓரளவுக்கு நல்ல வெற்றியை பெற்றது. ஆனால் அதற்குப் பிறகு சிவசந்திரன் இயக்கிய ஓரிரு படங்கள் பெரும் தோல்வியை சந்தித்ததால் அதன் பிறகு அவர் படம் இயக்குவதை விட்டு விட்டார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!