
இளையராஜாவுக்கு பத்மபாணி விருது
மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகமும் , மஹாராஷ்டிரா அரசும் இணைந்து, ‛அஜந்தா - எல்லோரா" சர்வதேச திரைப்பட விழாவை ஆண்டுதோறும் நடத்துகிறது . இதில், கலைத் துறையில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்கு பத்மபாணி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது . இந்த ஆண்டுக்கான அஜந்தா - எல்லோரா சர்வதேச திரைப்பட விழா வரும் 28ல் துவங்கி பிப., 4வரை மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் நடக்கவுள்ளது. இந்த விழாவின் துவக்க நாளான ஜன., 28ல் ராஜ்யசபா எம்.பி.,யும், இசையமைப்பாளருமான இளையராஜாவுக்கு பத்மபாணி விருது வழங்கப்பட உள்ளதாக விழா குழுவினர் அறிவித்துள்ளனர்
விருது பெறுவோருக்கு நினைவுப்பரிசு, பாராட்டு பத்திரம், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும். முன்னதாக பிரபல பாடலாசிரியர் ஜாவித் அக்தர், இயக்குநர் - எழுத்தாளர் சாய் பிரனாஜ்பே மற்றும் நடிகர் ஓம் புரி உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!