
அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன்
கடந்த சில வருடங்களாக சில மேனேஜர்கள், பிஆர்ஓக்கள் மீது தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரும் குறை சொல்லும் அளவிற்கு அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து விஷால், ரவிமோகன் ஆகியோர் அவர்களது மேனேஜர்களை நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷாலுடன் கடந்த பல வருடங்களாக அவரது வலது கரமாக செயல்பட்டு வந்தவர் ஹரி கிருஷ்ணன். விஷால் தற்போது இயக்கி நடித்து வரும் "மகுடம்" படப்பிடிப்பின் போது நடந்த சில சம்பவங்கள் தான் ஹரிகிருஷ்ணனை அவர் நீக்கக் காரணம் என்கிறார்கள்.
அடுத்து மற்றொரு நடிகரான ரவி மோகன், அவருடன் நெருக்கமாக இருந்த ஷியாம் ஜாக் என்பவரை நீக்கியுள்ளார். ரவியின் பட வேலைகள், அவரது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை ஷியாம்தான் கவனித்து வந்தார். ரவி சொந்தமாக ஆரம்பித்த ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஆரம்பித்த பிறகு இருவருக்கும் இடையில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டதாம். அதனால், அவரை நீக்கும் முடிவை ரவி எடுத்துள்ளார் என்று சொல்கிறார்கள்.
இவர்கள் தவிர, இன்னும் சில நடிகர்களும் அவர்களுடன் தொழில் ரீதியாக இணைந்து செயல்படும் சிலரை நீக்கும் முடிவை இந்த புத்தாண்டில் எடுக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!