
100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல்
அனில் ரவிப்புடி இயக்கத்தில், சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛மனசங்கர வரபிரசாத் காரு". பீம்ஸ் செசிரோலியோ இசையமைப்பில் உருவான "மீசாலா பில்லா" என்ற பாடல் கடந்த வருடம் அக்டோபர் மாதம் யு டியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. வெளியான 75 நாட்களில் அந்தப் பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இப்பாடல் வெளியான போது இளம் நடிகர்களைப் போல சிரஞ்சீவி, இப்படி நடனமாடி காதல் பாடலில் நடிப்பது குறித்த விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், அவற்றைப் புறம் தள்ளி இந்தப் பாடல் இவ்வளவு வரவேற்பு பெற்றுள்ளது ஆச்சரியப்பட வைத்துள்ளது. சங்கராந்தியை முன்னிட்டு படம் ரிலீஸாகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!