
பிரம்மாண்ட புராண காவிய கதையில் அல்லு அர்ஜூன்
இப்போது இணைய உள்ள, இந்தப் படம் இந்திய சினிமா இதுவரை பார்த்திராத அளவு பிரம்மாண்டமான புராண கதையாக ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. வலுவான கதை சொல்லல், பிரமாண்டமான காட்சிகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்திய மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு இதுவரை பார்த்த புராண படங்களை மறுவரையறை செய்யும் என்று திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
பிப்ரவரி 2027ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருகிறது. ஏற்கனவே ரன்வீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் ராமாயணம் சினிமா ஆகி வருகிறது. அனுமன் கதை அனிமேசனில் உருவாகி உள்ளது. அல்லு அர்ஜூன் கதை எந்த புராண கதை என்பது பலரின் கேள்வி ஆக உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!