
சிம்புவின் 51வது படத்தை தயாரிப்பதை உறுதிப்படுத்திய அர்ச்சனா கல்பாத்தி
அது குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறுகையில், ‛‛எஸ்டிஆர் 51- வது படம் ரொமான்டிக் காதல் கதையில் உருவாகிறது. இந்த படத்திற்கு நான்கு அதிரடியான பாடல்களை வைத்திருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து"" என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சிம்புவின் 51வது படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பது உறுதியாகி இருக்கிறது. அதோடு பேண்டஸி ஜானரில் உருவாகும் இந்த படத்தில் சிம்பு நெகட்டிவ் கலந்த ரோலில் நடிப்பதாகவும் ஏற்கனவே அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!