
வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று வா வாத்தியார் நிகழ்ச்சி
இன்று டிசம்பர் 8 இந்த இடைக்காலத் தடை குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. செலுத்த வேண்டிய சுமார் 21 கோடி ரூபாயை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் செலுத்தி தடையை நீக்கும் உத்தரவைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் எழுந்துள்ளது. நீதிமன்ற விசாரணைக்குப் பிறகே இது முடிவாகும்.
இதனிடையே, இன்று மாலை சென்னையில் இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வை நடத்த உள்ளார்கள். அதற்கான அழைப்புகள் மீடியா உட்பட அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!