
ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்
சென்னையில் நடந்த இந்த படவிழாவில் அவர் பேசுகையில், ‛‛நான் பல படங்களை இயக்குனர் என்றாலும், நடிக்கும்போது எந்த விஷயத்திலும் தலையிடமாட்டேன். இயக்குனர் சொல்வதைதான் கேட்பேன். நான் கோவையை சேர்ந்தவன். அந்த ஊர்க்காரர்கள் எனக்கு பட வாய்ப்புகளை கொடுக்கவில்லை. மற்ற மாவட்டத்துக்காரர்கள் கொடுக்கிறார்கள் என்று ஜாலியாக குறிப்பிட்டார். அதேபோல் கடந்த 10, 15 ஆண்டுகளாக தமிழில் மிக சிறந்த படங்கள் அதிகம் வருவது இல்லை. பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் படங்கள் வரவில்லை. ஒரு சாராருக்கு பிடித்த படங்களே அதிகம் வருகின்றன். சினிமாவை பொறுத்தவரையில் இயக்குனர் தான் கேப்டன். அவர்களை யாரும் தவறாக பேசக்கூடாது. அவர்களுக்கு இழுக்கு வரும்படி நடந்து கொள்ளக்கூடாது"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!