
இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடந்த இப்பட விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், ‛‛இப்படம் ஒரு உண்மையான சம்பவம். இயக்குநர் அதை சொன்ன போது எனக்கு உடல் நடுங்கி விட்டது. உண்மையான கதையைச் சொல்லும்போது மக்கள் நெருக்கமாக உணர்வார்கள். அவர்களுக்குப் பெரிய விழிப்புணர்வை அது தரும். கமர்ஷியல் சினிமா உலகில் இப்படி உண்மைக் கதையை சொல்ல முயற்சித்த தினேஷுக்கு நன்றி. அர்ஜூன் சார் ரியல் லைப்பில் உண்மையாகவே ஜென்டில்மேன். அவர் மேஜிக்கை நேரில் பார்த்தது நல்ல அனுபவம். நான் நன்றாக பைட் செய்ய அவர் தான் காரணம். அவர் தான் இந்தப்படத்தில் ஹீரோ. உங்கள் எல்லோருக்கும் படம் பிடிக்கும். இப்படம் திரைக்கு வரும் போது, அனைவரும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!