
எதிர்பார்த்த வியூஸ்கள் பெறாத தளபதி கச்சேரி
இப்பாடல் விஜய்யின் முந்தைய பாடல்களின் சாதனையை முறியடிக்கும் என்று அவரது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. யுவன்ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த "தி கோட்" படப் பாடலான "விசில் போடு" பாடல் 24 மணி நேரத்தில் 24.8 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை முறியடிக்காமல் "தளபதி கச்சேரி" வெறும் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்தது விஜய் ரசிகர்களுக்கும், அனிருத் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
விஜய்யின் அரசியல் காரணமாக அவர் மீதான நடுநிலை ரசிகர்களின் ஈர்ப்பு குறைந்ததா அல்லது குறுக்கு வழியில் "பாட்" வைத்து பாடல்களின் பார்வையை ஏற்றிவிடாமல் தயாரிப்பு நிறுவனம் தவிர்த்துவிட்டதா என்பது தெரியவில்லை. இருந்தாலும் தயாரிப்பு நிறுவனம் "ரியல் டைம் வியூஸ்" என ஒரு வியூஸ் கணக்கைத் தர வாய்ப்புள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!