
பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை
இதை அறிந்து கொள்ளும் சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அந்த பாடல்களை விலைக்கு வாங்கி, அதற்கேற்ப கதைகள் எழுதி படம் தயாரித்து விடுவார்கள், இளையராஜா என்ற பெயருக்கும், பாடல்களுக்காகவுமே படம் வெற்றி பெற்று விடும்.
அப்படி உருவான படங்களில் முக்கியமானது "பாரு பாரு பட்டணம் பாரு". "பிள்ளைநிலா" வெற்றிக்கு பிறகு அடுத்து ஒரு காமெடி படம் இயக்க விரும்பினார் மனோபாலா. இதற்கான கதை தேடியபோது ஒரு தயாரிப்பாளரிடம் 5 பாடல்கள் இருப்பதை கேள்விப்பட்டு தயாரிப்பாளர் கலைமணி அந்த பாடல்களை வாங்கி வந்து அதற்கேற்ப ஒரு கதை எழுதினார். அந்த கதையை மனோபாலா இயக்கினார்.
ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்ட நாயகன் அதனால் சந்திக்கும் பிரச்சினைகளை காமெடியாக சொன்ன படம். மோகன், ரஞ்சனி நடித்தனர். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்தார். படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை, பாடல்கள் ஹிட்டாது. இதே படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அங்கு பெரிய வெற்றியை பெற்றது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!