
பாகுபலிக்கு வழிவிடுகிறாராம் விஷ்ணு விஷால்: ஆர்யன் தெலுங்கு ரிலீஸ் தள்ளிவைப்பு
விஷ்ணு விஷால் நடிப்பில் நாளை (31ம் தேதி) வெளியாக உள்ள படம் "ஆர்யன்". அவரே தயாரித்தும் உள்ளார். தமிழில் தயாரானாலும் தெலுங்கு, மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளிவருவதாகவும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தெலுங்கில் நாளை பாகுபலி படத்தின் தொகுப்பு படமான "பாகுபலி: தி எபிக்" படமும், ரவி தேஜாவின் "மாஸ் ஜாத்ரா" படமும் வெளியாவதால் தனது "ஆர்யன்" தெலுங்கு ரிலீசை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.
இது குறித்து அவர் தெலுங்கு ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ள அறிக்கையில்... "பாகுபலி: தி எபிக்" மற்றும் "மாஸ் ஜாத்ரா" ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இதனை கணக்கில் கொண்டு நவம்பர் 7ம் தேதி "ஆர்யன்" வெளியாகும். சினிமா என்பது போட்டி அல்ல, அது ஒரு கொண்டாட்டம். கொண்டாட்டங்களுக்கு அவற்றின் சொந்த இடமும் வெளிச்சமும் தேவை, என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் "ஆர்யன்". இப்படத்தினை விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ளார். முழுக்க சைக்கோ த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகி இருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!