
நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த காந்தாரா சாப்டர் 1
முதல் நாள் வசூலைப் போலவே அடுத்தடுத்த நாட்களிலும் வசூல் சிறப்பாகவே இருந்துள்ளது. பண்டிகை நாட்கள் என்பதால் மக்கள் தியேட்டர்களில் அதிகமாகவே வந்து படத்தைப் பார்த்துள்ளார்கள்.
கடந்த வாரம் விடுமுறை நாட்கள் இருந்ததால் வசூல் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இப்படம் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக வசூலித்து வருகிறது. இன்று முதல் வார நாட்கள் ஆரம்பமாகிறது. இந்த வார நாட்களிலும் வசூல் அதிகமாக இருந்தால் படம் விரைவிலேயே "பிரேக் ஈவன்" ஆகிவிடும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!