
கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி
தற்போது அவர் நோயிலிருந்து மீண்டு விட்டதாக தகவல்கள் வெளியானது. சென்னையில் சிசிச்சை பெற்று வந்த அவர் கேரளாவில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் நடிக்க இருக்கிறார். இதனை மம்முட்டியே அவரது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ""சிறிய இடைவெளிக்குப் பிறகு, நான் வாழ்க்கையில் மிகவும் விரும்பும் விஷயத்திற்கு (நடிப்பதற்கு) திரும்பி வருகிறேன். என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. சொல்ல வார்த்தைகள் போதவில்லை. கேமரா என்னை அழைக்கிறது” என்று பதிவிட்டிருக்கிறார்.
இதனால் மம்முட்டி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!