
டைரக்டரை அண்ணா என அழைத்த ப்ரீத்தி அஸ்ராணி
படம் குறித்து பேசிய ப்ரீத்தி, ‛‛இது என் முதல் மலையாள படம், எனக்கு மலையாளம் தெரியாது. ஆனாலும், என்னை நம்பி இந்த கேரக்டரை கொடுத்தனர். கபடி விளையாட்டு பின்னணியில் இந்த கதை உருவாகி உள்ளது. இந்த படத்தில் பெற்ற ஜாலக்காரி பாடல் ஹிட்டாகி உள்ளது. அந்த பாடலை கொடுத்த இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு நன்றி. இந்த பட இயக்குனர் உன்னி கிருஷ்ணன் எனக்கு அண்ணா மாதிரி. எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தார். என் படங்களில் இது வித்தியாமாக இருக்கும் என்கிறார்.
அடுத்து எஸ்.ஜே. சூர்யா இயக்கி, நடிக்கும் கில்லர் படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார் ப்ரீத்தி அஸ்ராணி. இவரின் தாய்மொழி தெலுங்கு அங்கே பல படங்களில் நடித்து இருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!