
வெற்றிமாறன் படக் கம்பெனியை மூடியது ஏன்
இது குறித்து விசாரித்தால், தனது கிராஸ் ரூட் நிறுவனம் சார்பில் உதயம் என்எச்4, கொடி, காக்காமுட்டை, பொறியாளன், விசாரணை, நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களை தயாரித்தார் வெற்றிமாறன். இதில் பல படங்கள் லாபத்தை தரவில்லை. கடைசியாக அவர் தயாரித்த மனுஷி, பேட் கேர்ள் படம் சென்சாரில் சிக்கியது. வழக்குகளை, கடும் விமர்சனங்களை சந்தித்தது. இதனால் அவருக்கு பல கோடி இழப்பு. இந்த விமர்சனங்கள் காரணமாக பேட் கேர்ள் படமும் படு தோல்வி அடைந்தது.
இனி, அவர் படம் தயாரித்தால் ரிலீஸ் செய்ய, வியாபாரம் செய்ய பல தடைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால், பட நிறுவனத்தை மூடியுள்ளார். வழக்கமான கமர்ஷியல் கதைகளை தவிர்த்து, சிக்கலான, பஞ்சாயத்துகளை கதைகளை அவர் தேர்ந்தெடுத்ததால் மக்கள் அந்த படத்தை ரசிக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!