
சரோஜாதேவி, விஷ்ணுவர்தனுக்கு கர்நாடக ரத்னா விருது
முதல்வர் சித்தராமய்யா தலைமையில் நடந்த கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு இதனை வெளியிட்ட சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் "திரைத்துறையில் சாதனை புரிந்ததற்காக நடிகர் விஷ்ணுவர்தன், நடிகை சரோஜாதேவி ஆகியோருக்கு கர்நாடகத்தின் மிக உயரிய விருதான கா்நாடக ரத்னா விருது வழங்குவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டு உள்ளது" என்றார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த விஷ்ணுவர்தன் கடந்த 2009ம் ஆண்டு காலாமானர். தமிழ் நாட்டில் "கன்னடத்து பைங்கிளி" என அழைக்கப்பட்ட நடிகை சரோஜாதேவி கடந்த ஜூலை 14ந்தேதி மரணம் அடைந்தார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!