
பிளாஷ்பேக்: முத்துராமலிங்கத் தேவர் பார்த்த ஒரே படம்
அவர் காலத்தில் சினிமா இருந்தது. ஆனால் அவர் சினிமா பார்த்ததில்லை. சினிமா மக்களுக்கு அவசியமில்லாத ஒன்று, இதனால் அவர்களின் உழைப்பும், நேரமும் வீணாவதாக கருதினார். அப்படிப்பட்ட தேவர் பார்த்த ஒரே படம் "ஔவையார்".
சந்திரலேகாவைப் போல மற்றொரு பிரமாண்ட படைப்பாக 1953ல் "ஔவையார்" படத்தை வாசன் தயாரித்தார். ஔவையார் பாத்திரத்தில் பிரபல கர்நாடக சங்கீதப் பாடகியான கே.பி.சுந்தராம்பாள் நடித்தார். தன் வாழ்க்கையில் சினிமாவே பார்த்திராத தேவரை பார்க்க வைத்த படம் ஔவையார். சிவகங்கையிலுள்ள ஶ்ரீராம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தார். படம் அவருக்கு பிடித்துப்போனதால் இரண்டாவது முறையும் இந்தத் தியேட்டருக்கு வந்து "ஔவையார்" படத்தை தேவர் ரசித்துப் பார்த்தார். தனது படத்தை 2 முறை பார்த்ததற்காக தேவருக்கு கடிதம் எழுதி நன்றி தெரிவித்தார் வாசன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!