
கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த்
ராமதாஸ் என்ற இயற்பெயர் கொண்ட இவர் "முண்டாசுப்பட்டி" படத்தில் சினிமா வாய்ப்பு தேடுவதற்காக தனது பெயரை முனீஷ்காந்த் என்று மாற்றிக் கொள்ளும் கேரக்டரில் நடித்தார். அந்த படமும், இவரது கேரக்டரும் நல்ல வரவேற்பை பெறவே தனது பெயரை முனீஷ்காந்த் என்றே மாற்றிக் கொண்டார்.
சூது கவ்வும், ஜிகர்தண்டா, டார்லிங்-2, மாநகரம், டிடி ரிட்டன்ஸ், கேங்கர்ஸ் போன்ற பல படங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் கதையின் நாயகனாகி விட்டார். முனீஷ்காந்துடன் ருத்ரன் பிரவீன், ஷாதிகா, மவுரிஷ் தாஸ், அஷ்வின், நாகராஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
லோகேஷ் குமார் இயக்கும் இந்த படம் கிராமத்து பின்னணியில் முழுமையான "டார்க் காமெடி" படமாக தயாராகிறது. இதுகுறித்து லோகேஷ்குமார் கூறும்போது, ""எளியவர்களுக்கு எளிதாக கிடைக்கும் கந்து வட்டி எப்படி அவர்களின் கழுத்தை நெருக்குகிறது? என்பதே கதைக்களம். சிரிப்போடு, சிந்திக்க வைக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கி வருகிறோம். படத்தின் தலைப்பு உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும்"", என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!