
விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்?
அதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இரண்டு படங்களின் வெளியீடு பற்றி எந்த ஒரு சத்தமும் இல்லை. எந்த விதமான போஸ்டர்கள், சமூக வலைத்தள பதிவுகள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என எதுவுமே நடக்கவில்லை. அதனால், அந்த இரண்டு படங்களும் அன்றைய தினம் வெளியாகுமா என்பது சந்தேகம்தான்.
அது போல ஆகஸ்ட் 29ம் தேதி அதர்வா நடித்துள்ள "தணல்" படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்தப் படம் பற்றிய அப்டேட் எதுவும் பின்னர் வெளியாகவில்லை. அதனால், அந்தப் படமும் வெளியாகுமா என்பது தெரியவில்லை.
எந்தெந்த படங்கள் வரும் வாரம் வெளியாகும் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிய வரும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!