
என் இதயம் நொறுங்கிவிட்டது : நாய்களுக்காக கண்ணீர் விட்டு கதறிய நடிகை சதா
இந்நிலையில் நடிகை சதா அழுதபடி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ‛‛6 வயது குழந்தை இறக்க காரணம் ரேபிஸ் நோய் அல்ல என நிரூபணம் ஆன பின்னரும் கூட நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. எப்படி அரசால் 3 லட்சம் நாய்களுக்கு காப்பகத்தில் அடைக்கலம் தர முடியும். நிச்சயம் அவைகளை கொல்லத்தான் போகிறார்கள். நாய்களுக்கு போதிய கருத்தடை ஊசி போடாதது மாநில அரசு மற்றும் நகராட்சியின் தோல்வி. அதற்காக நாய்களை தண்டிப்பது சரியா. வீட்டில் நாய் வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டு அழகான நாயை வாங்குபவர்களால் ஒரு தெருநாயின் வாழ்வதற்கான உரிமை பறிக்கப்படுகிறது. கடைசியில் அதை பராமரிக்க முடியாமல் தெருவில் விடுகிறார்கள். இவர்கள் எல்லாம் விலங்குகள் நல பிரியர்கள் என சொல்லாதீர்கள். நீதிமன்ற உத்தரவை தடுக்க முடியாது. என்ன செய்வது என தெரியவில்லை. என் இதயமே நொறுங்கிவிட்டது. நாய்களை காக்க தவறிய இந்த நாடு வெட்கப்பட வேண்டும்"" என ஆதங்கத்துடன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!