
விஜய், அஜித்துக்கு வாழ்த்து, ரஜினிக்கு பாராட்டு : 30 ஆண்டை தொட்ட சிம்ரன் பேட்டி
இப்போது நாம் செல்போனில் முழ்கிவிட்டோம். குடும்பத்துக்கு நேரம் செலவழியுங்கள். குடும்ப உறவுகளை மதியுங்கள், அவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள் என்று சொல்கிறது டூரிஸ்ட் பேமிலி. அந்த படம் 100 நாட்களை கடந்தது மகிழ்ச்சி. எனக்கும் தேசிய விருது வாங்கும் ஆசை இருக்கிறது. அது விரைவில் நடக்கலாம். ஜோடி படத்தில் என்னுடன் தனது திரையுலக பயணத்தை தொடங்கியவர் திரிஷா. அவர் டூரிஸ்ட் பேமிலியை பாராட்டியது மகிழ்ச்சி. அவரும் விஜய், அஜித், மணிரத்னம் படங்கள் என சிறப்பாக செயல்படுகிறார்.
எனக்கு ரோல் மாடல் ஸ்ரீதேவி தான். அப்புறம், என் அம்மா. விஜய் இப்போது அரசியலுக்கு செல்கிறார். அஜித் கார் ரேசில் ஆர்வமாக இருக்கிறார். இரண்டு பேருக்கும் வாழ்த்துகள். பேட்ட படத்தில் நான் ரஜினி சாருடன் நடித்தேன். செட்டில் ஓரமாக அமர்ந்து அவர் செயல்பாடுகளை ரசிப்பேன். எவ்வளவு எளிமையான, நல்ல மனிதர். கூலி படக்குழுவுக்கு வாழ்த்துகள், அந்த படத்தை நான் சென்னையில் தான் பார்ப்பேன்"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!