
பிளாக்மெயில் புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி
வழக்கமான நடிப்பைத் தாண்டி பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்க "பிளாக்மெயில்" இடம் கொடுத்தது. புதுவிதமான அனுபவமாக இது அமைந்தது. இயக்குநர் மு. மாறனின் முந்தைய படங்களான "கண்ணை நம்பாதே", "இரவுக்கு ஆயிரம் கண்கள்" படத்தில் கதாநாயகிகளுக்கு வலுவான கதாபாத்திரம் இருக்கும். "பிளாக்மெயில்" படத்தில் என்னை கதாநாயகியாக கேட்டபோதும் நிச்சயம் நடிப்பை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரமாக அமையும் என்ற நம்பிக்கையில் சம்மதித்தேன். ஜிவி பிரகாஷ் உடன் இதற்கு முன்பு கலர்புல்லான மியூசிக் வீடியோவில் பணிபுரிந்திருந்ததால் இந்த வாய்ப்பு அவர் மூலம் எனக்கு அமைந்தது"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!