
புராண அனிமேஷன் படத்திற்கு யுஏ சான்றிதழ்
இந்தப் படத்தின் கதை, இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. விஷ்ணுவின் தீவிர சீடரான பிரஹலாதனைச் சுற்றி இப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. அவர் தனது தந்தை இரண்யகசிபுவின் எதிர்ப்பை மீறி விஷ்ணுவை வணங்குகிறார். இறைவன் பிரம்மாவிடமிருந்து அமரத்துவம் பெற்ற இரண்யகசிபுவை அழிக்க, பகவான் விஷ்ணு தனது அரிய அவதாரமான நரசிம்மராக அவதரிக்கிறார். என்பதுதான் படத்தின் கதை.
வருகிற 25ம் தேதி படம் வெளிவருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை குழு "யுஏ "சான்றிதழ் வழங்கி உள்ளது. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு புராண படத்திற்கு அதுவும் அனிமேஷன் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கி இருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள். படத்தின் நாயகன் பிரஹலாதன் சோகத்துடன் யுஏ சான்றிதழை சுமந்து நிற்பது போன்ற படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!