
துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி
சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ராணா கூறும்போது, “ஒவ்வொரு கதையும் அதற்கான நடிகர்களை ஏதோ ஒரு விதத்தில் தேடிக் கொள்ளும். குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரத்திற்கு பலரும் சரியாக இருப்பார்கள் தான் என்றாலும் ஒரு தயாரிப்பாளராக நான் இந்த படத்திற்கு சரியான நடிகராக தேடிய போது துல்கர் சல்மானை தவிர என்னால் வேறு யாரையும் நினைத்துப் முடியவில்லை. ஒருவேளை அவர் இந்த படத்திற்கு கிடைத்திருக்காவிட்டால் இந்த படத்தை தயாரித்திருக்கவே மாட்டேன். அந்த அளவுக்கு துல்கர் சல்மான், தான் தேர்ந்தெடுக்கும் கதை மற்றும் கதாபாத்திரங்கள் மூலம் ஒரு அழகியலான சினிமாவை ரசிகர்களிடம் கொண்டு செல்கிறார் என்றே நினைக்கிறேன்” என்று பாராட்டியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!