சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா?
ஜூலை 12, 2025
Advertisement
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் "பராசக்தி" எனும் படத்தை தனது 25வது படமாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சிவகார்த்திகேயன் அவரின் 24வது படத்தை குறுகிய காலக்கட்டத்தில் நடிக்கவுள்ளார். குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் தான் இதை இயக்குகிறார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை வருகின்ற ஆகஸ்ட் மாத இரண்டாம் வாரத்தில் தொடங்கவுள்ளனர் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறாராம். ஆனால் அவரின் கால்ஷீட் இவர்கள் படப்பிடிப்பு நடத்தும் நாட்களில் ஒத்துவரவில்லை. அதனால் இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவுள்ள படத்தை தொடங்கலாமா என படக்குழுவினர் யோசித்து வருகின்றனராம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!