
பாகுபலி குழுவினரின் ரீ-யூனியன்
அப்படம் 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று படக்குழுவினர் பலரும் தங்களது நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்கள். இதனிடையே, படக்குழுவினர் நேரில் சந்தித்து ரீ-யூனியன் செய்துள்ளனர்.
தயாரிப்பாளர்கள், இயக்குனர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி, பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டவர்கள் அதில் கலந்து கொண்டுள்ளனர். தமன்னா, அனுஷ்கா ஆகியோர் வரவில்லை. இப்படி ஒரு ரீயூனியனைப் பார்ப்பதற்கு மகிழ்வாக உள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
"பாகுபலி" படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து அக்டோபர் 31ம் தேதி வெளியிட உள்ளார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!