
25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ?
ஆனால், தற்போது உருவாகி வரும் "காந்தாரா" படத்தின் முன் பகுதி படமான "காந்தாரா சேப்டர் 1" படத்திற்காக ரிஷப் 100 கோடி வரை சம்பளம் கேட்பதாகவும், லாபத்திலும் குறிப்பிட்ட சதவீதம் பங்கைக் கேட்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தின் வெற்றியோடு ஒப்பிடுகையில் இரண்டாம் பாகம் இன்னும் அதிக வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால்தான் அவர் இவ்வளவு சம்பளம் கேட்கிறார் என சாண்டல்வுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தை 100 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறார்கள். படத்தின் வியாபாரம் மட்டுமே 400 கோடிக்கும் அதிகமாக நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறதாம்.
பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால் 2 கோடி சம்பளம் வாங்கினால் கூடவே ஒரு கோடி கூடுதலாக சம்பளம் கேட்பதுதான் வழக்கம். ரிஷப் கேட்கும் சம்பளத்தைக் கணக்கிட்டால் அது 25 மடங்கு அதிகமாக இருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!