
சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர்
ஆர்.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‛இவன் தந்திரன்" படம் 2017ல் வந்தது. ஆனால், படம் வெளியான சில நாட்களில் சினிமா ஸ்டிரைக் அறிவிக்கப்பட, படத்துக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இப்போது பார்ட் 2 உருவாகிறது. முதல்பாகத்தில் நடித்த நடிகர்கள் யாரும் நடிக்கவில்லை. வட சென்னை, கேஜிஎப் படங்களில் நடித்த சரண் ஹீரோ. சிந்து பிரியா ஹீரோயின். முதல்பாகத்துக்கும் இதற்கும் தொடர்பு இருக்குமா என ஆர்.கண்ணன் விவரிக்கவில்லை. ஏன், கவுதம் கார்த்திக்கை நடிக்க வைக்கவில்லை என்றும் சொல்லவில்லை. இதில் நண்டு ஜெகன் காமெடி பண்ணுகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!