
மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா அர்த்தம் இதுதான்
மனித உடம்புக்குள் மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டால், மனிதனின் குணம் மிருகக் குணமாக மாறினால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது. ‛கைமேரா" என்பது மராத்திய மொழி வார்த்தை. இதற்கு மரபணுக்கள் மாற்றம் என அர்த்தமாம்.
கிரேக்க புராணத்தில் பல்வேறு விலங்குகளின் உடல்பாகம் கொண்ட கொடூர விலங்கிற்கும் இந்த பெயர். பெங்களூருவைச் சுற்றி நிகழும் கதைக்களம் என்பதால் கர்நாடகாவில் பெங்களூர், ஹம்பி, இங்கே ஓசூர், ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. மரபணு மாற்றப்பட்ட மனநிலையில் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்ததால் படப்பிடிப்பு முடிந்த கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பின்னரே அதிலிருந்து மீண்டு இருக்கிறார் ஹீரோ எத்தீஷ்.
மனிதனும், பாம்பும் இணைந்த மாதிரி அந்த கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இது ரிலீஸாக இருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!