
பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல்
அவர் கூறும்போது, ‛‛மாரி செல்வராஜனின் வெற்றி என்னுடைய வெற்றிதான். இது எங்களது குழுவின் வெற்றி. என்றாலும் அவரது இந்த வெற்றி போதாது என்றுதான் சொல்லுவேன். அவர் பான் இந்தியா இயக்குனராக வேண்டும். அதற்கான அனைத்து தகுதியும் அவரிடத்தில் உள்ளது. பாரதிராஜாவுக்கு பிறகு அதிவேகமாக படம் எடுக்கக் கூடியவர் என்றால் அது மாரி செல்வராஜ்தான். அவரது முதல் படமான பரியேறும் பெருமாள் எனக்கு மிகவும் பிடித்த படமாக இருந்த நிலையில், பின்னர் வாழை படம் அதைவிட பிடித்தது.
ஆனால் இப்போது பைசன் படத்தை பார்த்த பிறகு வாழையை விட இந்த படம் என்னை அதிகமாக கவர்ந்துள்ளது. அந்த அளவுக்கு இந்த படத்தில் சிக்கலான உணர்வுகளை கதாபாத்திரங்களாக வைத்து மிக நேர்த்தியாக படத்தை இயக்கியிருக்கிறார். எதிர்காலத்தில் மாரி செல்வராஜ் பான் இந்தியா இயக்குனராகி ஷாருக்கான், அமீர்கான் போன்றவர்களை இயக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்று தெரிவித்திருக்கிறார் ராம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!