
விஜய்சேதுபதி மகன் படவிழாவில் விஜய்யின் ஜனநாயகன் இயக்குனர்
விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தை இயக்கும் எச்.வினோத்தும் விழாவில் கலந்து கொண்டு, பேசினார். விஜய்சேதுபதி மகன் படத்தை விஜய் பட இயக்குனர் வாழ்த்த வருகிறார்? எப்படி கனெக் ஷன் என பலர் நினைத்தனர்.
இது குறித்து விசாரித்தால் பீனிக்ஸ் படத்தை இயக்குபவர் பைட் மாஸ்டார் அனல் அரசு. இவர் இந்தியளவில் முன்னணி பைட் மாஸ்டர். அவர் மனைவி ராஜலட்சுமி இந்த படத்தை தயாரிக்கிறார். எச்.வினோத் இயக்கிய பல படங்களுக்கு அவர் பைட் மாஸ்டர். அந்த வகையில் விழாவுக்கு வந்தார் என்றார்கள்.
பொதுவாக விஜய் சேதுபதி நடிக்கும் பட விழாக்களுக்கு வராத, அவர் மனைவி ஜெசியும் மகன் ஹீரோவாக அறிமுகம் ஆகும் விழா என்பதால் பீனிக்ஸ் விழாவுக்கு வந்தார். பட விழாவில் நடிகை தேவதர்ஷினி, சூர்யா சேதுபதியை என் மகன் மாதிரி என்று பாராட்டினார். காரணம், படத்தில் அவர்தான் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
பொதுவாக தங்கள் வாரிசுகள் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படங்களில், சம்பந்தப்பட்ட ஹீரோ கவுரவ வேடத்தில் நடிப்பது உண்டு. இதுவரை பல படங்களில் கவுரவ வேடத்தில் நடித்துள்ள விஜய்சேதுபதி இந்த படத்தில் கவுரவ வேடத்தில் வருகிறாரா என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!