
என் படங்களில் அஞ்சலியை தொடர்வது ஏன்? : இயக்குனர் ராம்
ராம் பேசுகையில் ‛‛என் படங்களில் தொடர்ச்சியாக ஏன் அஞ்சலி என்று கேட்கிறாார்கள். கற்றது தமிழ் படத்தில் அவரை அறிமுகப்படுத்தினேன். அந்த சமயத்தில் மகாராஷ்டிராவில் படப்பிடிப்பு நடந்தபோது அவருக்கு அடிபட்டது. இன்றுவரை அந்த விபத்து குறித்து சொல்லவில்லை. தரமணி, பேரன்பு படங்களில் கமர்ஷியல், வியாபார விஷயங்களுக்காக ஒரு ஹீரோயின் வேண்டும் என்றபோது, நான் அஞ்சலிக்குதான் போன் செய்தேன். ஏழுகடல் ஏழு மலை படத்திலும் அது நடந்தது. இந்த படத்தில் ஒரு தமிழ் ஹீரோயின் வேண்டும் என ஹாட்ஸ்டார் சொன்னபோதும் அவருக்கு போன் செய்தேன். சின்ன கேரக்டர், கவுரவ வேடம். தனக்கு செட்டாகாத கேரக்டர் என்றாலும் அவர் எனக்காக நடித்து கொடுக்கிறார். என் வீட்டில் என் மகள், மகன் மாதிரி அவரும் ஒரு உறுப்பினர்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!