
திருக்குறள் படத்தை முதல்வர் பார்ப்பாரா?
இதில் கலைச்சோழன் திருவள்ளுவராகவும், தனலட்சுமி வாசுகியாகவும் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் ""இந்த படத்துக்கு நிறைய உதவிகள் தேவைப்படுகின்றன. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் குமரி வள்ளுவர் சிலை இடம் பெறுகிறது. அதை உருவாக்கிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன்தான் இப்போது முதல்வர். அவர் இந்த படத்தை பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். இளையராஜா இசை படத்துக்கு பலம்.
திருக்குறள் படத்தில் காதல் காட்சிகள், வசனங்களும் அதிகம் இருக்கிறது. வள்ளுவர் காமத்து பாலையும் எழுதியிருக்கிறார். படத்தில் சில போர்க்கள காட்சியும் இருக்கிறது. இந்த படத்தில் வள்ளுவர் வெள்ளை உடையுடன் இளமையாக வருகிறார். அவர் அப்போது என்ன உடை அணிந்து இருந்தார் என யாருக்கும் தெரியாது. அவர் உடை விஷயத்தில் விவாதம் தேவையில்லை. அவர் சொன்ன நல்ல விஷயங்களை எடுப்போம். பிற்காலத்தில வள்ளுவர் போட்டோவை வரைந்த வேணுகோபால் சர்மாதான் அவருக்கு ஒரு உருவம், உடை கொடுத்தார்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!