
திருக்குறள் படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம்
வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோருடன், குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையராஜா பாடல்கள் எழுதி, இசையமைத்துள்ளார். சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 27ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில் படத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: இந்த படம் உருவான கதையை ரொம்ப சுருக்கமாக சொல்லி விடுகிறேன். திருக்குறளை படமாக பண்ணுங்கன்னு ஒருத்தர் வேண்டுகோள் வைத்தார். எப்படி 1330 குறளை படமாக எடுக்க முடியும்னு யோசித்த போது எங்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது கருணாநிதியின் குரளோவியம். எதை ஓவியமா பண்ண முடியுமோ? அவர் அதை புத்தகமா எழுதிவிட்டார். அதிலிருந்து நாங்கள் எதையெல்லாம் காட்சிப்படுத்த முடியுமோ? அந்த குறள்களை எல்லாம் எடுத்துக் கொண்டோம் .
இந்த படத்துக்கான பணம் அது அதன் போக்குல வந்தது. இதுல எந்த சிரமமுமே எனக்கு இல்லை. வாழ்க்கையில பல விஷயங்கள் அதன் போக்குல தான் அதுவாக நிகழும். படம் செட் போட்டோம் அந்த நாள் முழுக்க மழை, செட் முழுக்க மழை, இடும்பைக்கு இடும்பை குறள் தான் ஞாபகம் வந்தது. அதைத்தாண்டி படம் முடித்தோம்.
அப்புறம் இளையராஜா சார் கிட்ட போனோம். படத்தை பார்த்து அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அற்புதமான இசையை தந்தார். தனலட்சுமி வாசுகியா நடித்துள்ள பெண், அவருக்கு முதல் படம், அவங்க வாழ்க்கையில முன்னுக்கு வரணும். இந்த துறையில ஜொலிக்கணும். என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!