
தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத்
இதுகுறித்து அவர் கூறும்போது "என்னுடைய ரிங் டோனே "நானும் ரெளடிதான்" படத்தில் இருந்து "நீயும் நானும்..." பாடல்தான். தமிழ் மொழி மீதுள்ள காதலால் சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டேன். ஆக்டிங் டிரைனர் சூரி எனக்கு திருக்குறள் சொல்லிக் கொடுத்து அதில் இருந்து தமிழ் கற்றுக் கொடுத்தார். இயக்குநர்கள் சி. பிரேம்குமார், அல்போன்ஸ் புத்திரன், மணிகண்டன் படங்களில் பணிபுரிய ஆசை. அதேபோல நடிகர்கள் விஜய்சேதுபதி, தனுஷ் இவர்களைப் பார்த்து எப்போதும் வியப்பேன். அஜித் சார் எப்போதும் என் பேவரிட். அவருடன் பணிபுரிய ஆசைப்படுகிறேன். என்றென்றும் அவர் எனது இன்ஸ்பிரேஷன். நான் நடிக்கும் தமிழ் படம் பற்றி தயாரிப்பு நிறுவனம் முறைப்படி அறிவிக்கும் " என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!