
என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல்
இந்நிலையில் சென்னையில் நடந்த இரவுப்பறவை பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியவர் ""என்னை சுற்றி பெரிய பிரச்னை ஓடுகிறது. என்னை கொல்ல சதி நடக்கிறது. நான் துாத்துக்குடிகாரன், வீரம் மிகுந்தவன். ஆனாலும், எனக்கு எதுவும் நடந்து விடக்கூடாது. இந்த மேடையில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் என்னை பாதுகாக்க வேண்டும். அவர்கள் இருக்கிற தைரியத்தில் நான் இருக்கிறேன்" என்று பேசினார்.
கடைசியில் விழாவில் பேசிய திருமாவளவன். "ஜாக்குவார் என்றால் சிறுத்தை என்று அர்த்தம். அவர் வீரம் மிகுந்தவர். அவருக்கு ஒன்றும் ஆகாது. நாங்கள் இருக்கிறோம். ஆனாலும், போலீசில் டிஜிபியிடம் பேசி அவருக்கு துப்பாக்கி உரிமம் வாங்கிக் கொடுக்க முயற்சிக்கிறேன்"" என்றார்


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!