
சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல்
இதற்கிடையே ஆர்த்தியின் அம்மாவான தயாரிப்பாளர் சுஜாதா, ‛‛நான் வாங்கிய கடனுக்கு ஒருபோதும் ரவியை நான் பொறுப்பேற்க கூறியதில்லை. அவர் சொல்வது முற்றிலும் பொய்"" என தெரிவித்திருந்தார்.
இப்படி மாறி மாறி ஒவ்வொருவராக அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் பாடகி கெனிஷா இன்ஸ்டாவில், ‛‛பெரிய சத்தங்களுக்கு மத்தியில் அமைதியான நம்பிக்கை காத்திருக்கிறது. காயங்களை பாடங்களாய் ஏற்கிறேன். சோகத்தின் நடுவே மனம் பாடுகிறது. நாளை விடியல் புதிய துவக்கத்தை நோக்கி பயணக்கிறது"" என குறிப்பிட்டுள்ளார்.
கெனிஷாவின் இந்த பதிவு வைரலாக, என்ன மாதிரியான விடியல் பயணம் இது... என ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை பதிவிடுகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!