
10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா
2014ம் ஆண்டு வெளியான "சரபம்" படத்தில் ஹீரோவாக நடித்த நவீன் சந்திரா அதன் பிறகு பரமன், பட்டாஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் ஹீரோவாக நடிக்கவில்லை. தற்போது இந்த படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : 10 ஆண்டுகளுக்கு முன்பு "சரபம்" படத்தில் நடித்தேன். அதன் பிறகு தமிழில் "லெவன்" திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறேன். இந்த கதையை கேட்ட பிறகு இதில் நடித்தால் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு எனக்கு ஏற்பட்டது. இந்த திரைப்படத்தை ஒரு படமாக இல்லாமல் இரண்டு படமாக தமிழ் தெலுங்குக்கு என தனித்தனியாக படப்பிடிப்பு நடத்தினோம். நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றினர். படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!