
திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்?
சென்னையில் பேசாதவர் திருநெல்வேலிக்கு போய் பேச வேண்டிய அவசியம் என்ன என்று விசாரித்தால், டூரிஸ்ட் பேமிலி படத்தை யுவராஜ், நசரேத் பசிலியான் என்ற 2 இளைஞர்கள் தயாரித்து இருக்கிறார்கள். இதில் நசரேத் பசிலியான் சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம். அதனால், லண்டனில் இருந்து சென்னை வந்தவுடன் அவரை தனது ஏரியா பக்கம் பிரமோஷனுக்காக அழைத்து சென்றுவிட்டாராம்.
அந்தகன், குட்பேட் அக்லியை தொடர்ந்து டூரிஸ்ட் பேமிலி படத்திலும் தனது நடிப்பு பேசப்படுவது, தனக்கு பாராட்டு குவிவதால் சிம்ரன் மகிழ்ச்சியில் இருக்கிறாராம். இதே பட நிறுவனம் இதற்கு முன்பு குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்து இருந்தது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!