
சேப்பாக்கத்தில் சென்னை மேட்ச் பார்த்து ரசித்த அஜித், சிவகார்த்திகேயன்
நேற்றுமுன்தினம் தான் அஜித் ஷாலினியின் 25வது திருமண நாள் நிகழ்வு என்பதால் அந்த உற்சாகத்துடன் தனது மனைவி குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு இந்த கிரிக்கெட் போட்டியை நேரில் ரசிக்க அஜித் வந்துள்ளார் என்றே தெரிகிறது. இதே போட்டியை நேரில் பார்த்த சிவகார்த்திகேயன், அஜித்தை சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் அஜித்துடன் அமர்ந்து கிரிகெட் போட்டியை கண்டு ரசித்தார். எப்போதும் நரைத்த தலைமுடியுடனேயே வெளி இடங்களுக்கு வந்து செல்லும் அஜித் நேற்று தலைமுடிக்கு டை அடித்து இருந்தார் என்பது இன்னொரு ஆச்சர்யம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!