
சர்ச்சைகளுக்கிடையில் 200 கோடி வசூல் கடந்த எல் 2 எம்புரான்
இதனிடையே, இப்படம் தற்போது 200 கோடி வசூலைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “தடைகளை உடைத்தெறிந்து 200 கோடியை வசூலித்து, "எம்புரான்" வரலாறு படைத்துள்ளது,” என மோகன்லால் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து நாட்களுக்குள்ளாகவே இந்த சாதனையைப் படைத்துள்ளது. 200 கோடி வசூலைக் கடந்துள்ள இரண்டாவது மலையாளப் படம் இது. இதற்கு முன்னதாக கடந்த வருடம் வெளிவந்த "மஞ்சுமெல் பாய்ஸ்" படம் 250 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை "எல் 2 எம்புரான்" முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!